×

சிலம்பு எக்ஸ்பிரஸ் உட்பட 10 ரயில்களின் இயக்க நாட்கள் திடீர் மாற்றம்

சென்னை: சென்னை சென்ட்ரல்-புவனஸேவர் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12829, 12830),சென்னை சென்ட்ரல்-சந்திரகாச்சி அந்தியோதயா எக்ஸ்பிரஸ்  (ரயில் எண் 22841, 22842) ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்குவதற்கும், கேஎஸ்ஆர் பெங்களூரு-தன்பூர் எக்ஸ்பிரஸ் (12295, 12296), மதுரை-  சண்டிகர் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12687, 12688) ரயில்கள் பெரம்பூர் ரயில்நிலையத்தில் இருந்து இயக்க அனுமதிக்க வேண்டும் என்றும் ஒப்புதல்  வேண்டி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர்-செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் (16181) தற்போது திங்கள், புதன், சனிக் கிழமைகளில்  இயக்கப்பட்டு வந்தது. இனிவரும் நாட்களில் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் இயக்குவதற்கும், செங்கோட்டை - சென்னை எழும்பூர் சிலம்பு  எக்ஸ்பிரஸ் (16182) செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வந்தது.

இனி வரும் நாட்களில் வெள்ளி, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்குவதற்கும், தாம்பரம்- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் எண் (22657)  ஏற்கனவே திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் இயக்கப்பட்ட நிலையில், இனிவரும் நாட்களில் ஞாயிறு, திங்கள், புதன் கிழமைகளில்  இயக்குவதற்கும், நாகர்கோவில்- தாம்பரம் (22658) ஏற்கனவே செவ்வாய், புதன், வியாழன் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது திங்கள், செவ்வாய்,  வியாழக்கிழமைகளில் இயக்குவதற்கும், நாகர்கோவில்- காச்சிகுடா (16354) செவ்வாய் கிழமைகளில் இயக்கப்பட்டு வந்த ரயில் தற்போது சனிக்கிழமை  இயக்குவதற்கும், காச்சிகுடா- நாகர்கோவில் (16353) புதன்கிழமை இயக்கப்பட்ட ரயில் ஞாயிற்றுக்கிழமை இயக்குவதற்கும்,  கன்னியாகுமரி-ராமேஸ்வரம் (22622) ஞாயிறு, செவ்வாய், வெள்ளி இயக்கப்பட்டது.

தற்போது ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் இயக்குவதற்கும், ராமேஸ்வரம்-கன்னியாகுமரி (22621) சனிக்கிழமை, திங்கள், வியாழன்  இயக்கப்பட்டது. தற்போது சனிக்கிழமை, திங்கள், புதன்கிழமைகளில் இயக்குவதற்கும், திருப்பதி- ராமேஸ்வரம் (16779) வெள்ளி, ஞாயிறு,  செவ்வாய்கிழமைகளில் இயக்கப்பட்டது. தற்போது சனிக்கிழமை, திங்கள், புதன் கிழமைகளில் இயக்குவதற்கும், ராமேஸ்வரம்-திருப்பதி (16780)  வியாழன், சனிக்கிழமை, திங்கள் கிழமைகளில் இயக்கப்பட்டது. தற்போது வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் கிழமைகளில் இயக்குவதற்கு அனுமதி  கோரியுள்ளது. விரைவில் இந்த ரயில்கள் அறிவிக்கப்பட்ட நாட்களில் இயக்கப்படலாம்.

Tags : Silambh Express ,change , Silambu Express, 10 trains, Chennai Central
× RELATED பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை...