×

தனி நபர் கொரோனா டேட்டாவுக்கு ஆபத்து 5 பைசா போதும்; ஒங்க ஜாதகம் ‘ஜூட்’: ஆபத்தான நேரத்திலும் பிசினஸ் பாக்கறாங்க

மும்பை: வெறும் 5 பைசா போதுங்க...ஒங்க  பெயர், வீட்டு முகவரி, ஒங்க ஆதார் எண், ஒங்க வருமானம்  எப்படி என்று பல விஷயங்களை கறந்து  விடலாம். என்னடாது...இப்படி ஒரு  கொடுமையா? அதுவும், கொரோனா பாதிப்பில், பீதியில் இருக்கும் மக்களிடம்...என்று நீங்கள் நினைக்கலாம்.  உண்மை தான்; சாதா மக்களுக்கு தான் கொரோனா பீதியெல்லாம்; பிசினஸ் பார்க்கறவங்களுக்கு பிசினஸ் தான். ஆனால், எல்லாரையும் ஒரு ரவுண்ட்  கட்டிவி டும் இந்த கொடூர வைரஸ் என்பது தெரியாமல் சிலர் அப்பாவி மக்கள் ஆவணங்களை வைத்து விளையாடுகிறார்கள். பல கம்பெனிகளுக்கு  கொரோனா வைரஸ் பாதிபபு, தனி நபர் விவரங்கள் எல்லாம் கையில் தாராளமாக கிடைக்கிறது. பெரிய மருத்துவமனைகளை பற்றி கேட்கவே  வேண்டாம். கொரோனா தகவல்கள் வந்தபடி இருக்கும்.

முன்பாவது கையில் எழுதி கொடுப்பதால் அடையாளம் தெரியாதவர்கள் கையில் போகாது. ஆனால், இப்போது டிஜிட்டல் உலகில் எல்லாம் சுலபம்.
கொரோனா டேட்டா தொழில் படு பிசியாக உள்ளது இப்போது. ஆம், முன்பெல்லாம் ரயில்வே நிலையங்களில் உள்ள புக்கிங் தகவல்கள், ரயில் டிக்கட்,  விமான பயண டிக்கட், ஏடிஎம் ரசீது லபக்குவதெல்லாம் போய், இப்போது வெகு சுலபமாக தனி  நபர் டேட்டாக்களை லபக்க  கோரோனா பட்டியல்  பயன்படுகிறது. பொதுவாக கள்ளநோட்டு கும்பல், கலப்பட கும்பல் போல டேட்டா திருட்டு கும்பல் தனியாக பல இடங்களில் பரவியுள்ளது. இவர்கள்  யார் என்பதே  தெரியாது. அவர்கள் லபக்கும் தகவல்கள் வெறும் தலா 5 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்டர்நெட் சுதந்திரம் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் அபார் குப்தா கூறியதாவது: நாங்கள் இன்டர்நெட் உரிமை பற்றியும் அதில் இருந்து  தகவல்கள் திருடுவோரை தடுக்க சட்டம் இயற்றுவது பற்றியும் அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறோம். தனி நபர் டேட்டாக்களை திருடுவது,  விற்பது குறித்து பல ஆண்டாக நாங்கள்  குரல் கொடுத்து வருகிறோம். அரசும் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரயில் டிக்கட், விமான பயண  டிக்கட் போன்ற பல வழிகளில் தனி நபர் டேட்டாக்களை திருடப்பட்டு வருகின்றன. இப்போது,  கொரோனா பாதிப்பு தகவல்களை திருடுவது அதிகரித்து  வருகிறது. எல்லாமே டிஜிட்டல், ஆன்லைன் மயமாகி விட்டதால் இந்த சைபர் கிரிமினல்களுக்கு  எளிதாக போய் விட்டது.

வெறும் 5 பைசாவுக்கு தலா ஒரு டேட்டா என்று கணக்கு போட்டு தகவல்கள் பரிமாறப்படுகின்றன. ல நிறுவனங்களும், குறிப்பாக சில நடுத்தர, சிறிய  மருத்துவமனைகளும் கூட இந்த தகவல்களை வாங்கி சேமிக்கின்றன. குறிப்பிட்ட நபர் பற்றிய தகவல்கள், அவர் வருமான நிலை என்று  சேகரித்து  வைக்க பல நிறுவனங்கள் மும்முரமாக உள்ளன. சில வரத்தக ரீதியான தேவைகளுக்கு இந்த தகவல்கள் பயன்படுகின்றன. இதை தடுக்க  அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  எளிதில் இந்த தகவல்கள் கிடைப்பதால் இந்த கிரிமினல்களுக்கு சுலபமாகி விட்டது. இவ்வாறு குப்தா கூறினார்.

கொரோனா டேட்டா சீக்ரட் கம்பெனிகள்
கள்ள நோட்டு கும்பல் ரகசிய ஆலைகள் வைத்து நடத்துவது போல,  கொரோனா பற்றிய தகவல்களை சேகரிப்பதற்கு தான் இந்த கொரோனா டேட்டா  சீக்ரட் கம்பெனிகள் இயங்குகின்றன என்று கூறப்படுகிறது. ரயில்களில் பயணிகள் பட்டியல் போடும் போது அதில் இருந்து பயணிகள் பற்றிய  விவரத்தை சிலர் சேகரிப்பதுண்டு. ஒவ்வொரு  தனி நபர் பற்றிய தகவல்களுக்கும் விலை உண்டு. அப்படி தான் கொரோனா தகவல்களுக்கும்  கிடைக்கிறது என்றும் கூறப்படுகிறது.


Tags : Corona, Business, Aadhaar no
× RELATED காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு...