×

கல்வான் மோதலில் காயமடைந்த வீரர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனை மோசம்?: ராணுவம் மறுப்பு

புதுடெல்லி: கல்வான் மோதலில் காயமடைந்த ராணுவ வீரர்கள் சிகிச்சை பெறும் லடாக் ராணுவ மருத்துவமனையில் வசதிகள் சரியில்லை என்பது ஆதராமற்ற குற்றச்சாட்டு என ராணுவம் தெரிவித்துள்ளது. இந்திய சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ம் தேதி சீனா நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் லே பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சிகிச்சை பெற்று வரும் வீரர்களை நேற்று முன்தினம் பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பிரதமர் மோடி வீரர்களுடன் கலந்துரையாடுவது தொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ராணுவ மருத்துவமனையில் சரியான வசதிகள் இல்லை, மருத்துவ உபகரணங்கள் இல்லை என டிவிட்டரில் விமர்சனங்கள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டை ராணுவம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில்,” தைரியம் மிகுந்த வீரர்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பது குறித்து சர்ச்சை கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது. ராணுவம் அதன் வீரர்களுக்கு சிறந்த சிகிச்சையை வழங்கி வருகின்றது. ராணுவ மருத்துவமனை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : soldiers ,Hospital , Calvan, wounded soldiers, hospital, military refusal
× RELATED கொரோனா பாதிப்பில் இருந்து...