அமெரிக்காவில் ஊரடங்கு நீடிக்கும் நிலையில் மகள் ஒலிம்பியாவுடன் செரினா குதூகுலம்

நியூயார்க்: அமெரிக்காவில் ஊரடங்கு நீடிக்கும் நிலையில் மகள் ஒலிம்பியாவுடன் டென்னிஸ் வீராங்கனை செரினா குதூகுலமாக கழித்து வருகிறார். அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸ் (38), உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் வீரர்களில் ஒருவர். நியூயார்க்கில் உள்ள இணையதள நிறுவனத்தின் இணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஓஹானியன் என்பவரை துணைவராக தேர்ந்தெடுந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு தற்போது 2 வயதில் ெபண் குழந்தை உள்ளது. செரினா வில்லியம்ஸ் தனது மகள் அலெக்சிஸ் ஒலிம்பியா ஓஹானியுடன் சேர்ந்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில், தாயும், மகளும் இரட்டையர் வீராங்கனைகள் போல், ஊதா நிறத்தில் உடைகளை அணிந்துள்ளனர். ஒலிம்பியா தனது தலைமுடியை ஜடையாக பின்னி, உச்சந்தலையில் முடிந்துள்ளார். செரீனா வழக்கம் போல் தலைமுடியை காட்டியுள்ளார். சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து, ‘இது தலைப்பு கொடுங்கள்’ என்று கேட்டுள்ளார். சமூக வலைதளத்தில் தாயும், குழந்தையும் சேர்ந்த புகைப்படத்தை பலரும் பாராட்டி உள்ளனர். ஊரடங்கு காரணமாக செரினா தனது புளோரிடா இல்லத்தில் குடும்பம் மற்றும் கணவருடன் தனிமையில் கழித்தார். மேலும், ஊரடங்கின் போது செரினா, மகள் ஒலிம்பியாவுடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார்.

அது தொடர்பான புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. செரினா வில்லியம்ஸ் கடைசியாக ஆஸ்திரேலிய ஓபனில் வென்றார். அங்கு அவர் வீனஸ் வில்லியம்சை இறுதிப் போட்டியில் வீழ்த்தி 2017ல் கிராண்ட்ஸ்லாம் பெற்றார். ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் யுஎஸ் ஓபனுடன் செரினா மீண்டும் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: