சிறுநீரக தொற்று நோயால் பாதித்த டாக்டர் எஜமானி இறந்ததால் நாய் தற்கொலை; உத்தரபிரதேசத்தில் விேநாதம்

கான்பூர்: உத்தரபிரதேசத்தில் சிறுநீரக தொற்று நோயால் பாதித்த மருத்துவரான எஜமானி இறந்ததால், அவரது வளர்ப்பு நாய் தற்கொலை செய்துகொண்ட விேநாதம் நடந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் அனிதா ராஜ் சிங். இவர் நாய்கள் மீது அதிக அன்பு கொண்டவர். 12 ஆண்டுகளுக்கு முன்னர் சாலையில் நோயால் அவதியுற்ற நாயை தனது வீட்டிற்கு எடுத்து வந்து அதற்கு ஜெயா என பெயர் சூட்டி அன்போடு வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிறுநீரக ெதாற்று நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அனிதா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். அதனையடுத்து, அவரது உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அனிதாவின் மரணம் அவரது குடும்பத்தை துக்கத்தில் ஆழ்த்திய நிலையில், அவர் ஆசையாக வளர்த்து வந்த நாய் என்ற பெயர் கொண்ட ஜெயா, நீண்ட நேரமாக குரைத்துக்கொண்டே அழுதுள்ளது. பின்னர், குடியிருப்பின் நான்காவது மாடிக்குச் சென்று கீழே குதித்துள்ளது. உடனே நாயை மீட்டு அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், நாயின் முதுகெலும்பு உடைந்த நிலையில் ஏற்கெனவே இறந்து விட்டதாக அங்கு கூறியுள்ளனர்.

அதுகுறித்து அனிதாவின் மகன் தேஜா கூறுகையில், ‘எனது அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து ஜெயா மன உளைச்சலில் இருந்து வந்தது. அம்மாவின் அறையிலேயே தான் படுத்துக்கொண்டிருக்கும். அவர் இறந்த பிறகு உடலை வீட்டுக்கு கொண்டு வந்தபோது அழுதுகொண்டே இருந்த ஜெயா, சிறிது நேரத்தில் மாடிக்கு சென்று குதித்துவிட்டது. அதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை’ என்றார். இதையடுத்து அனிதாவின் இறுதி சடங்கு முடிந்த பின்னர் நாயும் வீட்டருகில் புதைக்கப்பட்டது. இச்சம்பவம், பலரது மனதையும் சோகத்தையும், நெகிழ்ச்சி அடையவும் செய்தது.

Related Stories: