×

கல்லூரி தேர்வுகளை நடத்துவது பற்றி ஆராய உயர்கல்வித்துறை செயலர் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கல்லூரி தேர்வுகளை நடத்துவது பற்றி ஆராய உயர்கல்வித்துறை செயலர் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகம் மானியக்குழு வழிகாட்டுதல் படி தேர்வுகளை நடத்துவது பற்றி அந்த குழு தமிழக அரசுக்கு பரிந்துரைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவ தொடங்கியதால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்து விதமான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது.  

இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் செய்யப்படவில்லை. படங்களை ஆசிரியர்கள் சரியாக முடிக்காததாலும், மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாதவாறு இருக்க தேர்வுகளை  ரத்து செய்து தமிழக அரசு அறிவித்தது. மேலும் மாணவர்கள் அனைவரும் செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதாக அரசு தெரிவித்தது. .

அதனையடுத்து தமிழகத்தில் போதிய மருத்துவமனைகள் இல்லாததால் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் வகுப்பறைகள் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்றப்பட்டது. தற்போது வரை தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது தொடர்பாக தமிழக அரசு எந்த முடிவும் எடுக்க வில்லை என்று தகவல் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் தற்போது கல்லூரி தேர்வுகளை நடத்துவது பற்றி ஆராய உயர்கல்வித்துறை செயலர் தலைமையில் தமிழக அரசு  குழு அமைத்துள்ளது. அந்த குழுவின் வழிகாட்டுதலின் பேரில் தமிழக அரசு தேர்வுகள் குறித்து முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : committee ,Higher Education Department , committee , Secretary , Higher Education ,exams
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...