×

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அலட்சியம்.: கழிவறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதியும் இல்லை என நோயாளிகள் குற்றச்சாட்டு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அங்கு உள்ள மருத்துவமனைகளும் நிரம்பி வருகிறது. இதனால் படுக்கை வசதியின்றி கொரோனா நோயாளிகள் தரையில் படுக்க வைத்துள்ளதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் கழிவறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை என்று கூறப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 169 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இன்று 169 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் அம்மாவட்டத்தின் ஒட்டு மொத்தமாக கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,308-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் மொத எண்ணிக்கை 106 ஆக உள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருபவர்கள் எண்ணிக்கை 2,919-ஆகவும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,113-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா வைரசால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதற்கு மருத்துவ நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் என்று புகார் எழுந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : facilities ,Chengalpattu Government Hospital , Chengalpattu, Government, Hospital , facilities, drinking water
× RELATED செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின்...