×

சீனா ஆக்கிரமிப்பை தடுக்க இந்தியா திட்டம்!: அந்தமான் - நிக்கோபார் தீவு பகுதியில் ராணுவ தளம் அமைக்க முடிவு!!!


டெல்லி: இந்திய பெருக்கடல் பகுதியில் தனது இருப்பை சீனா விரிவாக்கம் செய்து வரும் சூழலில் அந்தமான் - நிக்கோபார் தீவு பகுதியில் ராணுவ தளத்தினை அமைப்பதற்கான திட்டங்களை இந்தியா விரிவுபடுத்தி உள்ளது. அந்தமான் - நிக்கோபார் தீவு பகுதியில் கூடுதல் படைகளை நிறுத்தி தயார் நிலையில் வைத்திருக்கவும், ராணுவ உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் உரிய தருணம் ஏற்பட்டிருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய பெருக்கடல் பகுதி மட்டுமின்றி ;லடாக் எல்லையிலும் சீன படை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் சீன படைகளுக்கு பதிலடி கொடுக்க அந்தமான் - நிக்கோபார் தீவு பகுதியில் ராணுவ நிலையை ஏற்படுத்துவது இந்தியாவிற்கு காலத்தின் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, அந்தமான் - நிக்கோபரில் முதல்முதலாக கடந்த 2001ம் ஆண்டு  ராணுவ தளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடல், வான் மற்றும் தரை வழியாக ஊடுருவ முயற்சிக்கும் எதிரி படைகளை துரத்தி அடிப்பதற்கு இந்த ராணுவ தளம் கைகொடுக்கும் என்று பேசப்பட்டது. ஆனால் போதிய நிதி வசதி, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட காரணங்களால் அந்தமான் - நிக்கோபார் தீவு பகுதியில் ராணுவ உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் சிக்கல் நீடித்து வந்தது. ஆனால் தற்போது நிலைமை மாறியிருப்பதால் அங்கு ராணுவ தளம் அமைப்பதில் இந்தியா உறுதியுடன் இருப்பது தெரியவந்துள்ளது.

Tags : India ,Nicobar Islands ,Andaman ,Andaman - Nicobar Island ,Chinese , China, Occupation, India, Project, Andaman, Nicobar, Island, Military Base
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...