×

துருக்கியில் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து: 4 பேர் உடல் கருகி பலி, 90க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

துருக்கி: துருக்கியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 90க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சஹர்யா மாகாணத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நேற்று ஏராளமானோர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், திடீரென பட்டாசுத் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக ஆலைக்குள் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் பலத்த சத்தத்துடன் மளமளவென வெடித்து சிதறின. இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் கூக்குரலிட்டு வெளியே ஓடினர்.

இருப்பினும் சில தொழிலாளர்கள் தப்பிக்க முடியாமல் தொழிற்சாலையிலேயே சிக்கிக்கொண்டனர். இந்த ஆலைக்குள் 189 பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தொழிற்சாலைக்குள் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த விபத்தில் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையிலும், 90க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இதையடுத்து படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணி நீடித்து வருவதால் உயிரிழப்பும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது. பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : fireworks factory ,Turkey , Turkey, Fireworks, Plant, Terror, Fire, Body, Carnival, Kills, Injury
× RELATED விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து :ஒருவர் காயம்