×

லே மருத்துவமனையை பிரதமர் பார்வையிட்டது குறித்து அவதூறு; பாதுகாப்பு படை வீரர்களின் நேர்மையை விமர்சனம் செய்வது துரதிருஷ்டவசமானது...பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை..!!

டெல்லி: கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15,16ம் தேதிகளில் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 45 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. எல்லை கட்டுப்பாடு கோடு தாண்டி இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றதாலேயே இந்த வன்முறை நிகழ்ந்ததாக மத்திய அரசு கூறி உள்ளது. இதன் காரணமாக லடாக் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, எல்லையில் குவிக்கப்பட்ட படைகளை விலக்கிக் கொள்வதாக முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் பகுதியில் ஆய்வு செய்வதாக இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் லடாக் செல்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், பிரதமர் மோடி நேற்று காலை 9.30 மணிக்கு லடாக்கின் லே பகுதிக்கு வந்தடைந்தார். அங்கிருந்து விமானத்தில் பறந்தபடி, எல்லையில் உள்ள  நிலைமை மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளை ஆய்வு செய்தார். பின்னர், கடல் மட்டத்தில் இருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் கடினமான மலைப்பிரதேசமான நிம்மு ராணுவ முகாமுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு ராணுவ, விமான படை மற்றும் இந்தோ-திபெத் எல்லைபாதுகாப்பு போலீசாருடன் பேசினார்.

தொடர்ந்து, கல்வான் மோதலில் காயமடைந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களையும் பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்தார். இதற்கிடையே, பிரதமர் மோடி வருகையால் மருத்துவமனை நவீன படுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்து பரப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் காயமடைந்த வீரர்களை பிரதமர் சந்தித்து நிகழ்வு குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. பிரதமர் பார்வையிட்ட மருத்துவமனை குறித்து அவதூறு கருத்து பரப்பப்படுகிறது. பாதுகாப்பு படை வீரர்களின் நேர்மையை விமர்சனம் செய்வது துரதிருஷ்டவசமானது.

COVID பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக கால்வானில் இருந்து வந்ததிலிருந்து காயமடைந்த துணிச்சல்காரர்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. ராணுவத் தளபதி ஜெனரல் எம் எம் நாரவனே, இராணுவ அதிகாரிகள் காயமடைந்த துணிச்சலானவர்களை அதே இடத்தில் பார்வையிட்டார். ஆயுதப்படைகள் தங்கள் பணியாளர்களுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்கின்றன. இந்த வசதி 100 படுக்கைகளின் நெருக்கடி விரிவாக்க திறனின் ஒரு பகுதியாகும் மற்றும் ஜெனரல் மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியாகும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 03 தேதி லேவில் உள்ள பொது மருத்துவமனைக்கு விஜயம் செய்தபோது பார்வையிட்ட வசதியின் நிலை குறித்து சில பகுதிகளில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.


Tags : Leh Hospital ,security forces ,Ministry of Defense ,visit ,PM , PM's visit to Leh Hospital It is unfortunate to criticize the integrity of the security forces ... Report of the Ministry of Defense .. !!
× RELATED திருப்பதி மாவட்டத்தில் மத்திய...