×

அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் : தொற்று நோய் பரவும் அபாயம்

திண்டிவனம்: திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். அங்கு வரும் நோயாளிகள் மருத்துவமனை உள்ளே வந்தவுடன் முகம் சுளித்தபடி செல்கின்றனர். தற்போது கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருவதால் பல்வேறு பகுதிகளில் பிளீச்சிங் பவுடர், கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் திண்டிவனம் அரசு மருத்துவ
மனையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தும் மருந்து பொருட்களின் கழிவுகள் மருத்துவமனை வளாகத்திலேயே கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு கொட்டப்படும் குப்பைகள் அதிகளவு குவிக்கப்பட்டு, மருத்துவமனை ஊழியர்கள் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர் ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக மருத்துவமனையில் உள்ள மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Medical waste,government hospital ,Risk , infection
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...