×

வெப்பச்சலனம் காரணாமாக தஞ்சாவூர், திருவாரூர்,புதுக்கோட்டை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: வெப்பச்சலனம் காரணாமாக தஞ்சாவூர், திருவாரூர்,புதுக்கோட்டை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 4 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணாமாக தமிழகம், புதுவை கடலோர மாவட்டங்கள் மற்றும், தஞ்சாவூர், திருவாரூர்,புதுக்கோட்டை, அரியலூர், கோவை, நீலகிரி, எரோடே, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வன்மை பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாபலிபுரதத்தில் 7 செ.மீ  மழையும், திருக்கழுக்குன்றத்தில் 6 செ.மீ  மழையும் பதிவாகியுள்ளது. மேலும், கேளம்பாக்கம், வந்தவாசி, மதுராந்தகம் பகுதிகளில் தலா 5 செ.மீ  மழையும், பெருங்கலூர், திருப்பத்தூர், சத்தியபாமா  பல்கலைக்கழகம், பட்டுக்கோட்டை மற்றும் பெருந்துறை பகுதிகளில் தலா 4 செ.மீ   மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்காக எச்சரிக்கை
 
ஜூலை 4(இன்று) மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். ஜூலை 4 மற்றும் 5 தேதிகளில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்திலும், கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, கோவா கடற்பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஜூலை 4 முதல் 8ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : districts ,Pudukkottai Thanjavur ,Thiruvarur ,Thanjavur ,rainfall ,Pudukkottai , Thermal Concentration, Rain, Chennai Weather Center, Tamil Nadu, Puducherry
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 2...