×

கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்தாலும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்: அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டிவிட்டாலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதாக தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட வியாசர்பாடியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள கள பணியாளர்களுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் புதிதாக 4,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 2,721 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 2,082 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக குறைய தொடங்கியுள்ளது என தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டிவிட்டாலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதாக தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் குறிப்பிட்டு பேசினார்.

Tags : coroners , Corona Impact, Minister Pandiyarajan
× RELATED சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில்...