×

கடலூர் மீன் சந்தையில் அலைபோதும் கூட்டம்!: காற்றில் பறக்கும் சமூக இடைவெளி..நோய் பரவும் அபாயம்!!!

கடலூர்: கடலூர் மீன் சந்தையில் மக்கள் கூட்டம் அலைபோதுகிறது. சமூக இடைவெளி இன்றியும், முக கவசம் அணியாமலும் மக்கள் அதிகளவில் கூடுவதால் கொரோனா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் காலையிலிருந்தே மீன் வாங்குவதற்காக சிறு, சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகளவில் கூடுகின்றனர். கொரோனா தொற்று என்பது கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 1,201 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் தற்போது மீன் வாங்குவதற்காக பொதுமக்கள், சிறு வியாபாரிகள் கூடியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தற்போது பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் எந்தவித அச்சமும் இன்றி, சமூக இடைவெளியை பின்பற்றாமல் நாளை முழு ஊரடங்கு தொடங்கும் என்பதற்காக இன்றே மீன்களை வாங்குவதற்காக குவிந்துள்ளனர். நாளை முழு ஊரடங்கு என்பதால் மீன்பிடி துறைமுகமும், மீன் கடைகளும் இயங்காது என்பதால் கடலூர் மாவட்ட மக்கள் அதிகளவில் குவிய தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் கொரோனா தொற்று ஒரு சமூக தொற்றாக மாறுவதற்கு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. கொரோனா அச்சம் சிறிதும் இன்றி கடலூர் மக்கள் முகக்கவசம் அணியாமல் செல்கின்றனர்.

 கடலூர் துறைமுகத்தில் பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது என்று ஏற்கனவே காவல்துறையினரும், மீன்வளத்துறை அதிகாரிகளும் அறிவுறுத்தியுள்ள நிலையில் பொதுமக்கள் அதிகளவில் கூட அனுமதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தொடர்ந்து காவலர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி மீன் வாங்க அறிவுறுத்தியும் மக்கள் அதனை பொருட்படுத்தாமல் மீன்களை வாங்கி செல்கின்றனர். இதையடுத்து அங்குள்ள சிறு கடைகளை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.



Tags : Cuddalore ,Fish Market Meeting ,CuddaThe , The CuddaThe Cuddalore Fish Market Meeting
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!