×

பழனி அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்திட்டை கண்டெடுப்பு : சங்க கால ஆய்வேளிா் அரசா்களின் நினைவிடங்கள் என ஆய்வில் தகவல்

திண்டுக்கல் :  பழனி அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்திட்டையை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பழனி அருகே ஆமைக்கரடு பகுதியில், தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல் திட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவை இப்பகுதியை ஆண்ட சங்ககால ஆய்வேளிா் அரசா்களின் நினைவிடங்கள் என்பது ஆய்வில் தெரியவந்தது. கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஆய் ஆண்டிரன் வழியினரின் நினைவிடங்களை இந்த கல் திட்டைகள் குறிப்பதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆமைக்கரடின் தெற்குப் பகுதியில் புதிதாக 10-க்கும் மேற்பட்ட கல் அமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. பாறையின் மேற்புறத்தில் உருண்டை வடிவிலான கல்லை வைத்து, அதற்கு மேல் ஒரு தேங்காய் அளவிலான கல் வைக்கப்பட்டுள்ளது. இதன்மேல் மேலும் ஒரு உருண்டை வடிவிலான கல் வைக்கப்பட்டுள்ளது. இந்த தேங்காய் அளவிலான கல் இரண்டு உருண்டைக் கற்களுக்கு நடுவில் சொருகி வைக்கப்பட்டதைப் போல் அமைக்கப்பட்டுள்ளது.இந்த அமைப்பு சுமாா் 4 அடி உயரம் உள்ளது. மேலே உள்ள உருண்டைக் கல் 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதற்கான அடையாளத்தை காண முடிகிறது. அதே போல் இந்த கல்திட்டைகளில் கிடைத்துள்ள பலகைக் கல்லில் 7*7 கட்டங்களால் ஆன 49 கட்டங்கள் வரையப்பட்டுள்ளது. இவை பழந்தமிழரின் 7 பிறப்பு மற்றும் மறு பிறப்பு நம்பிக்கையை குறிப்பதாக கருதலாம் என்று தொல்லித்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர்கள் கூறினர்.

Tags : Sangam ,boulder ,Palani ,Kaltidi , Palani, 3 thousand, years, Dolmen, found, period ayvelia aracakal, memorials
× RELATED தினம் தினம் திரிவேணி சங்கமம்