×

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்: மாவட்ட எஸ்.பி பதிலளிக்க மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் உத்தரவு

தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளியை தாக்கிய புகாரில் மாவட்ட எஸ்.பி. பதிலளிக்க மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டிசம்பர் 3ல் இயக்கம் புகார் அளித்ததன் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் மாற்றுத்திறனாளியை காவல்துறையை சேர்ந்தவர்கள் ஏற்கனவே அடித்து சித்தரவதை செய்திருப்பதாகவும், இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் ஆணையரகம் மாவட்ட எஸ்.பி க்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் இயக்கத்தின் சார்பாக டிசம்பர் 3ம் தேதி தீபக் என்பவர் மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் அய்யாதுரை என்ற மாற்றுத்திறனாளியை எஸ்.ஐ.க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் தாக்கியதாக குறிப்பிட்டிருந்தார். அந்த அடிப்படையில் மாற்றுதிறனாளிகள் ஆணையராக உள்ள ஜான் சாம் வர்கீஸ் என்பவர் தற்போது மாவட்ட எஸ்.பி.க்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

அதில் உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று இருக்கக்கூடிய சட்டத்தின்படி மாற்றுத்திறனாளிகளை தாக்குதல் கூடாது என தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் காவல் நிலையத்திற்கு அழைத்து வரும் போது அவர்களுக்கு என்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறை பல உள்ளது. இந்நிலையில் காவலர்கள் மாற்றுத்திறனாளியிடம் தவறுதலாக நடந்துகொண்டதாக தகவல்கள் வந்துள்ளன. எனவே மாவட்ட எஸ்.பி. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு 15 நாட்களுக்குள், அதாவது ஜூலை மாதம் 18ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tags : Disaster Relief Welfare Commission District ,SP ,Translators' Welfare Commission , District SP's response, Translators, Welfare Commission
× RELATED நீட் தேர்வை தடுத்து நிறுத்தியது...