அமெரிக்காவின் ஜார்ஜியாவில் வளர்ப்பு நாய் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு உறுதி : செல்லப்பிராணிகள் வளர்ப்போர் மத்தியில் கலக்கம்!!

வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் வளர்ப்பு நாய் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜார்ஜியா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாயை பராமரித்து வந்த தம்பதிக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதால் வீட்டில் வளர்க்கப்பட்ட 6 வயது செல்லப் பிராணியை சுகாதாரப் பணியாளர்கள் கவனித்து வந்ததாக கூறப்பட்டுள்ளது. அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டதால், கொரோனா பரிசோதனை நடத்தியதில் நாய் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

ஏற்கனவே நாய்க்கு நரம்பு மண்டலத்தில் கோளாறு இருந்திருக்கலாம் என்று கால்நடை மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். அமெரிக்காவில் ஏற்கனவே நாய்க்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மிருகம் மூலம் கொரோனா பரவல் மிகவும் குறைவு என்று அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது.  ஏற்கனவே நியூயார்க்கின் வனவிலங்கு பூங்காவில் 4 வயதான பெண் புலி ஒன்றுக்கும் கரோலினா மாநிலத்தில் உள்ள ஒரு நாய்க்கும் கொரோனா தொற்று பரவியது. நாடியா என்ற பெண் புலியை கொரோனா பாதிப்பு ஏற்பட்ட முதல் வனவிலங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: