×

முதன்முறையாக ஒரே நாளில் 22,771 பேர் பாதிப்பு; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.48 லட்சத்தை தாண்டியது...18,655 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியது. உலகையே  ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,315-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 22,771 பேர் புதிதாக  பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 18,655 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 442  உயிரிழந்துள்ளனர். இதுவரை 3,94,227 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி  நேரத்தில் 14,335 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,92,990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8376 பேர்  உயிரிழந்துள்ள நிலையில், 1,04,687 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில்  1,02,721 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,385 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 58,378 பேர்  குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 94,695 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 2,923  பேர் உயிரிழந்துள்ள நிலையில், 65,624 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில்  உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 9673 பேருக்கு பாதிப்பு; 14 பேர் பலி; 6,349 பேர் குணமடைந்தது.
பீகாரில் 10,954 பேருக்கு பாதிப்பு; 80 பேர் பலி; 8,214 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 457 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 393 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 3,065 பேருக்கு பாதிப்பு; 14 பேர் பலி; 2,437 பேர் குணமடைந்தது.

கோவாவில் 1,482 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 734 பேர் குணமடைந்தது.
குஜராத்தில் 34,600 பேருக்கு பாதிப்பு; 1,904 பேர் பலி; 24,933 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 16,003 பேருக்கு பாதிப்பு; 255 பேர் பலி; 11,691 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 1,525 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 1,199 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 4,964 பேருக்கு பாதிப்பு; 25 பேர் பலி; 2,841 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 19,052 பேருக்கு பாதிப்பு; 440 பேர் பலி; 15,281 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 2,695 பேருக்கு பாதிப்பு; 15 பேர் பலி; 2001 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 1001 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 777 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 1,316 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 639 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 62 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 43 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 162 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 126 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 539 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 228 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 8,106 பேருக்கு பாதிப்பு; 29 பேர் பலி; 5705 பேர் குணமடைந்தது.

பாண்டிச்சேரி 802 பேருக்கு பாதிப்பு; 12 பேர் பலி; 331 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 5,937 பேருக்கு பாதிப்பு; 157 பேர் பலி; 4,266 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 3048 பேருக்கு பாதிப்பு; 42 பேர் பலி; 2,481 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 19,710 பேருக்கு பாதிப்பு; 293 பேர் பலி; 8805 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 8019 பேருக்கு பாதிப்பு; 119 பேர் பலி; 5075 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 20,462 பேருக்கு பாதிப்பு; 283 பேர் பலி; 10,195 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 20,488 பேருக்கு பாதிப்பு; 717 பேர் பலி; 13,571 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 25,797 பேருக்கு பாதிப்பு; 749 பேர் பலி; 17,597 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 16,934 பேருக்கு பாதிப்பு; 206 பேர் பலி; 7,632 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 252 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 75 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 14,297 பேருக்கு பாதிப்பு; 593 பேர் பலி; 11,049 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 1033 பேருக்கு பாதிப்பு; 10 பேர் பலி; 667 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 116 பேருக்கு பாதிப்பு; 54 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.
தாதர் நகர் ஹவேலியில் 257 பேருக்கு பாதிப்பு; 96 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.
சிக்கிமில் 102 பேருக்கு பாதிப்பு; 53 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.

Tags : victims ,time ,India , 22,771 victims affected for the first time in a single day; Coronal casualties in India exceed 6.48 lakh ... 18,655 killed
× RELATED வரலாற்றில் முதன்முறையாக ரூ.50,000ஐ தொட்ட...