×

ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்ய 2 மாத கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் முதல் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜிஎஸ்டி  வரி செலுத்துவது, கணக்குகளை தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டன. இதற்கிடையே கடந்த மார்ச் இறுதியில் ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்ய மத்திய அரசு சட்டம் திருத்தம் செய்தது. இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அவசர சட்டம் திருத்தம் செய்து, ஜிஎஸ்டி கணக்கு சமர்பிக்க ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியது.

இந்த நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துபவர்கள் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 30ம் தேதி கணக்குகளை தாக்கல் செய்யும் கால அவகாசம் இந்த ஆண்டு மட்டும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான முடிவை கடந்த ஜூன் 21ம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் மத்திய அரசு எடுத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்திலும் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டித்து வணிகவரித்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.


Tags : GST ,Govt , GST tax filing, 2 months duration, extension, extension, Govt
× RELATED சிட்டி சிவில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய நேரம் நீட்டிப்பு