×

வங்கக் கடலில் காற்று சுழற்சி தமிழகத்தில் இன்று மழை பெய்யும்

சென்னை: வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேலடுக்கில் உருவான காற்று சுழற்சி மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருப்பதால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும். வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டு இருப்பதால் 5ம் தேதி வரை மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று வீசும். அதனால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


Tags : Bay of Bengal The Bay of Bengal , Bengal Sea, Air circulation, Tamil Nadu, Today, Rain
× RELATED தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்