×

மத்திய அரசிதழில் மதுரை ‘எய்ம்ஸ்’ அறிவிப்பு

மதுரை: மதுரை தோப்பூரில் ரூ.1,464 கோடி செலவில் 750 படுக்கைகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென 218 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கியது. இதற்கென கடந்த ஆண்டு பிரதமர் மோடி, மதுரையில் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் இப்பகுதியில் சுற்றுச்சுவர் கட்டுமானத்திற்கென மத்திய அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கி, இதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஜப்பான் நாட்டின் உலக நிதி நிறுவனமான ஜிக்கா கமிட்டி மதுரை எய்ம்ஸ்க்கு கடனுதவி வழங்க முன்வந்தது. இக்கமிட்டி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மதுரை வந்து, கட்டுமான இடங்களை பார்வையிட்டு திருப்தி தெரிவித்ததுடன், வரும் செப்டம்பர் மாதம் நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் உறுதியளித்தது. இதையடுத்து நேற்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய அரசிதழில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


Tags : AIIMS ,Madurai ,government ,Central , central government, Madurai, announcements, announce
× RELATED மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை...