ஊரடங்கு உத்தரவால் மகன்கள், மகள்களை பாக்க முடியாத சோகத்தில் தம்பதி விஷம் குடித்துசாவு

சீர்காழி: ஊரடங்கு உத்தரவால் மகன், மகள், பேரக்குழந்தைகளை பார்க்க முடியவில்லை என்ற மனவேதனையில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பெருந்தோட்டம் மன்னர் தெருவை சேர்ந்தவர் அருள்சாமி(70). மீன் வியாபாரி. இவரது மனைவி பாக்கியவதி(65). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள். அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கடந்த 3 மாதங்களாக மகன், மகள் மற்றும் பேரப்பிள்ளைகளை பார்க்க முடியாமல் தம்பதியினர் தவித்து வந்ததோடு, மனவேதனையில் இருந்தனர்.

நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் இருவரும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுகுறித்து திருவெண்காடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரங்கால் மகன், பேரப்பிள்ளைகளை பார்க்க முடியாததால் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories:

>