×

கொரோனா பரவலை தடுக்க தினமும் மதியம் 2 மணிவரை மட்டுமே கடைகள் இயங்க வேண்டும்: வியாபாரிகளுக்கு ஏஎஸ்பி அறிவுறுத்தல்

மாமல்லபுரம்: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தினமுறும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தினமும் 180 முதல் 200 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், இந்த 4 மாவட்டங்களில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது. அதில், மாமல்லபுரத்தில் ஒரு சிலரே பாதிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி, வரும் காலங்களில் தொற்று ஏற்பட்டு சுற்றுலா பாதிக்காமல் இருக்க தீவிர நடவடிக்கையாக பேரூராட்சி அலுவலகத்தில் மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையில், அனைத்து வியாபாரிகளுடன் ஆலோனை கூட்டம் நடந்தது.

அப்போது, ஏஎஸ்பி சுந்தரவதனம் கூறுகையில், மாவட்டம் முழுவதும் தினமும் 180க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இதனை தடுக்க, மாமல்லபுரத்தில் உள்ள வியாபாரிகள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கடைகளுக்கு வரும் பொதுமக்களை வட்டமிட்டு ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்க வைத்து பொருட்களை கொடுக்க வேண்டும். அப்போது அவர்கள் கையுறை, முககவசம் அணிந்து இருக்கிறார்களா என உறுதி செய்யவேண்டும். அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கடைகளுக்கு முன்பு கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும். ஊரடங்கு முடியும் வரை தினமும் காலை 6 மணிமுதல் மதியம் 2 மணிவரை மட்டுமே வியாபாரிகள் கடைகளை திறக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில், மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், எஸ்ஐ குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். திருப்போரூர்: கேளம்பாக்கம், படூர், புதுப்பாக்கம், மாம்பாக்கம், கோவளம் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஓ.எம்.ஆர்., இ.சி.ஆர். சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுடன் மாமல்லபுரம் கூடுதல் எஸ்.பி. சுந்தரவதனம் ஆலோசனை நடத்தினார். அப்போது, கேளம்பாக்கம் பகுதி சென்னைப் புறநகர் பகுதியாக இருப்பதால் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைப் பிடிக்க வேண்டும். முக கவசம் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளின் வாகனங்களுக்கு பெட்ரோல் போடக்கூடாது. யாருக்கும் பொருட்கள் வழங்கக் கூடாது என்று அவர் தெரிவித்தார். மேலும், பொது இடங்களில் பிரச்னை செய்பவர்கள், அத்து மீறும் காவலர்கள், கடைகளில் தகராறு செய்பவர்கள் குறித்து 24 மணி நேரமும் தன்னிடம் தெரிவிக்கலாம் என்றார்.

Tags : Stores ,corona spread ,merchants , Corona, block, daily, until 2 pm, shops, run, dealer, ASP, instruction
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...