×

கூடுவாஞ்சேரியில் கொரோனா விழிப்புணர்வு முகாம்

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரானா அதிகம் உள்ள பகுதிகளில்  பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை சிக்னல், ஊரப்பாக்கம் ஊராட்சி அய்யன்சேரி கூட்ரோடு, வண்டலூர் ஊராட்சி ஓட்டேரி விரிவு, மண்ணிவாக்கம் ஊராட்சி ராமகிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நேற்று முன்தினம் நடந்தது. வண்டலூர் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் கூடுவாஞ்சேரி அசோகன், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக எஸ்பி கண்ணன் கலந்துகொண்டார். அப்போது, அவர் பேசுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் வரக்கூடாது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் வீட்டிலேயே தனித்திருக்க வேண்டும் என்றார்.


Tags : Corona ,awareness camp ,Guduvancheri ,Corona Awareness Camp , Guduvancheri, Corona, Awakening, Camping
× RELATED அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில்...