நாகர்கோவில் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சுகாதாரம் இல்லை: நோயாளிகளே சுத்தம் செய்யும் வீடியோவால் அதிர்ச்சி!

நாகர்கோவில்: நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைக்கான வார்டை நோயாளிகளே சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 300க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா சிகிச்சை வார்டை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர்கள் வருவதில்லை. நோயாளிகள் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தினமும் பரிசோதிப்பதில்லை என்று புகார் எழுந்துள்ளது.

பணியாளர்கள் வராததால் நோயாளிகளே தாங்கள் இருக்கும் இடத்தை சுத்தம் செய்யும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சுகாதார பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படாததே இந்த நிலைக்கு கரணம் என்று கூறப்படுகிறது. நோயாளிகளே கொரோனா வார்டை சுத்தம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளதால் அவர்களது உடல்நிலை மேலும் மோசமாகும் என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அணைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories:

>