×

தென்காசியில் அலுவலகங்கள் அமைக்க இடம் தேர்வு செய்வதில் குளறுபடி: நிதி ஒதுக்கப்படாததால் மக்கள் அதிருப்தி!!!

தென்காசி:  தென்காசியில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவற்கு இடஒதுக்கீடு செய்யப்படாததால் மாவட்ட மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பல்வேறு அலுவலகங்களுடன் கூடிய கட்டடத்திற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியது.

அதாவது செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்கள் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய, அரசாணை வெளியிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, செங்கல்பட்டில் ஆட்சியர் அலுவலகம் கட்ட ரூ.119 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் ஆட்சியர் அலுவலகம் கட்ட ரூ.104 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூரில் ஆட்சியர் அலுவலகம் கட்ட ரூ.109 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் மட்டும் ஆட்சியர் அலுவலகம் கட்ட, இடம் தேர்வு செய்யப்படாததால்,  நிதி ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த இழுபறிக்கு மாவட்ட நிர்வாகத்திற்கும், ஆளும்கட்சி அரசியல்வாதிகளுக்கும் இடையே நடக்கும் பனி போர்தான் காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தென்காசி மாவட்டத்திற்கு ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைக்க உடனடியாக இடங்களை தேர்வு செய்யவேண்டுமென்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கட்டடங்கள் கட்டுவதற்கான, உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : offices ,location ,Tenkasi , Choosing a location to set up offices in Tenkasi: People are dissatisfied with the lack of funds !!!
× RELATED அரசு பள்ளி கட்டிடங்களில் செயல்படும்...