×

கிராமப்புற கோயில்கள் திறப்பு: பக்தர்கள் தரிசனம்

திருவள்ளூர்: கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற கோயில்களில் நேற்றுமுன்தினம் முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ஊரடங்கு தொடர்வதால், மக்கள் கூட்டம் சேர விரும்புவதில்லை. கிராமப்புற கோயில்களிலும், கொரோனா தடுப்பு விதிமுறைகளையும், சமூக இடைவெளியையும் பின்பற்றி, சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். நோயாளிகள், முதியோர், குழந்தைகள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டுமெனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அறநிலைய துறை அதிகாரிகள் கூறுகையில், கோயிலுக்கு வருவோர் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். இல்லாவிடில், கோயிலுக்குள் அனுமதி கிடையாது. நோயாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கும் அனுமதியில்லை. அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். விபூதி, குங்குமம் உட்பட பிரசாதம், பாக்கெட்டுகளாக வழங்க வேண்டும். கோயில் வளாகங்களை தினமும் பலமுறை சுத்தம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.

Tags : Opening ,Rural Temples: Darshan of Devotees ,Temples ,Devotees , Rural temples, openings, darshan of devotees
× RELATED கபினியில் இருந்து 31,000 கனஅடி நீர் திறப்பு