×

பட்டாபிராம் உணவு பொருள் சேமிப்பு கிடங்கில் 2 ஊழியர்களுக்கு தொற்று: 4 நாட்களுக்கு கிடங்கு மூடல்

பட்டாபிராம்: ஆவடி அடுத்த பட்டாபிராமில் உள்ள இந்திய உணவுப் பொருள் சேமிப்பு கிடங்கில் பணியாற்றி வந்த இரு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ஏற்பட்டுள்ளது. ஆவடியை அடுத்த பட்டாபிராம், ஐ.ஏ.எப் சாலை, இந்துக் கல்லூரி அருகே மத்திய அரசுக்கு சொந்தமான உணவுப் பொருள் சேமிப்பு கிடங்கு உள்ளது. மேலும், இங்கிருந்து உணவுப் பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இடங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த கிடங்கில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை இங்கு பணியாற்றும் இரு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்தது.

இதையடுத்து, சக தொழிலாளிகள் தங்களுக்கும் தொற்று ஏற்படுமோ என அச்சம் அடைந்தனர். இதனால் பல ஊழியர்கள் வேலைக்கு வரவும் தயங்கினர். இதோடு மட்டுமல்லாமல், கிடங்கு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து, நிர்வாகத்தினர் உணவு பொருள் சேமிப்பு கிடங்கை தற்காலிகமாக  மூடி உள்ளனர். இதன்பிறகு, கிடங்கு 6ந்தேதி தான் திறக்கப்படும் என கூறப்படுகிறது. இது குறித்து உணவு பொருள் கிடங்கு ஊழியர்கள் கூறுகையில், தொற்று பரவிய நாள்முதல் பணியாற்றும் ஊழியர்களுக்கு முக கவசம், கை உறைகள் வழங்கப்படவில்லை.

மேலும், வெளிமாநிலங்களில் இருந்து உணவு பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டவில்லை. நிர்வாகம் கிடங்கில் சரியான நெறிமுறைகளை பின்பற்றாததால், ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதோடு மட்டுமல்லாமல், உணவுக் கிடங்கு தொடர்ந்து 4நாட்கள் மூடப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால், வெளி மாவட்டங்களுக்கு உணவுப்பொருட்களை அனுப்பும் பணி தடைபட்டுள்ளது.

Tags : Pattabram Food Warehouse , Buttapram, Food Warehouse, Closure
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...