×

உடல் பருமனை குறைக்க எளிய வழிமுறை: மருத்துவர் சீபன் தகவல்

சென்னை: கொரோனா சமயத்தில், வீட்டில் அதிக நேரம் இருப்பதால் சாப்பாடு அளவில்லாமல் உள்ளே தள்ளுவாங்க; ஏற்கனவே பருமனாக உள்ளவர்களுக்கு இது மேலும் சிக்கலாக்கிவிடும். அளவோடு சாப்பிட்டு வந்தால் பருமனை விரட்டி ஸ்லிம்மாகி விடலாம். இதுகுறித்து பள்ளியாடியை சேர்ந்த மருத்துவர் சீபன் கூறுகையில்,  ‘‘அதிக எடை எப்போதும் ஆபத்தானது. நாம் உண்ணும் உணவில் உள்ள நல்ல புரதம், நல்ல கொழுப்பு, வைட்டமின்கள், மினரல் சத்து, கார்போஹைட்ரேட் போன்றவை சரியான விகிதத்தில் இருந்தால் உடல் பருமனை குறைக்க முடியும். வெறும் உடற்பயிற்சி செய்துவிட்டு சரிவிகித உணவு (Balanced Diet) எடுக்காவிட்டால் எந்த பயனும் இல்லை. உடல் எடையை குறைத்தால் சர்க்கரை நோய்க்கான மாத்திரை மற்றும் இன்சுலின் ஊசியை கூட மெதுவாக குறைக்கவோ அல்லது நிறுத்தவோ செய்யலாம்.

கருமுட்டையில் நீர்க்கட்டி (PCOD) மற்றும் ஹார்மோன் பிரச்னையால் குழந்தை இல்லாத தம்பதியருக்கு உடல் எடையை குறைத்தால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஒற்றை தலைவலி சரியாகும். உடல் எடையை குறைக்க அதிக புரோட்டீன் பவுடரை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் உண்டால் கிட்னி பாதிக்கும். உடல் பருமன் உள்ளவர்கள் புரோட்டீன் பவுடர், அறுவை சிகிச்சை இல்லாமல், நம் வீட்டு உணவு முறை மூலம் எடையை குறைக்கலாம். மொத்தத்தில் சரிவிகித வீட்டு உணவு முறையை கடைபிடித்து உடல் எடையை குறைத்தால் வாழ்க்கையே மாறிவிடும்,’’ என்றார்.

Tags : Doctor , Obesity, doctor seaben
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...