×

தமாகா விவசாய பிரிவு மாநில தலைவர் கொரோனாவுக்கு பலி

திருச்சி: தமாகா விவசாய பிரிவு மாநில தலைவர் புலியூர் நாகராஜன் (58). இவர், கடந்த 26ம் தேதி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சியில் பங்கேற்றார். முதல்வருடன் கலந்துகொண்ட விவசாயிகள் 12 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் அறிவிக்கபடவில்லை. இந்நிலையில் கடந்த 30ம் தேதி திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட புலியூர் நாகராஜன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று  இறந்தார். இந்நிலையில் அவருக்கு ஏற்கனவே எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி என நேற்று முடிவு வந்துள்ளது. இதனால் அவருடன் கலந்து கொண்ட மற்ற விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். புலியூர் நாகராஜன் மறைவுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.Tags : Tamaka Agriculture Division ,state leader ,Corona ,Kills Corona , Tamaka Agriculture ,Division ,state leader, kills Corona
× RELATED நில புரோக்கர் கொலை வழக்கில் சமாஜ்வாதி...