×

ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படாத நிலையில் தொழில் நிறுவன அங்கீகாரம் செப். 30ம்தேதி வரை நீட்டிப்பு: மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு

சென்னை: தொழில் நிறுவனங்களுக்கான அங்கீகாரங்கள் செப்டம்பர் 30ம் தேதி வரை செல்லத்தக்கப்படி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுக்கப்படும் நிலையில்உள்ளது. எனினும் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படாத நிலையில் உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, தொழில் நிறுவனங்கள் பயனடையும் வகையில்தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தால், நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981 - ஆகியவற்றின்படி வழங்கப்பட்ட இசைவாணைகள் மற்றும் கழிவுகள் மேலாண்மை விதிகளின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரங்கள் ஆகியவற்றை 30.6.2020 வரை செல்லத்தக்கபடி ஏற்கனவே நீட்டிப்பு செய்து வழங்கப்பட்டது. தற்போது, இதை மேலும் மூன்று மாத காலங்கள் அதாவது செப்டம்பர் 30, 2020 வரை செல்லத்தக்கபடி நீட்டித்து வழங்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Notification Board Industry ,Pollution Control Board , Curfew, Business Establishment, Recognition, Sep. 30 Md., Extension
× RELATED மீண்டும் ஊரடங்கு?: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி