×

கடந்த மே மாதமே 25 லட்சம் லிட்டர் பால் விற்பனையை எட்டியது ஆவின் பால் விற்பனையில் சாதனை என்பதே ஒரு முறைகேடு: பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு

சென்னை: கடந்த மே 8ம் தேதியே 25 லட்சம் லிட்டர் பால் விற்பனையை எட்டிய நிலையில், தற்போது  ஆவின் பால் விற்பனையில் சாதனை என்பதே ஒரு முறைகேடு என்று பால் முகவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் 13 லட்சம் லிட்டரும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 12.03 லட்சம் லிட்டரும் என ஆக மொத்தம் தமிழகத்தில் நாளொன்றுக்கு 25 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து “ஆவின் நிறுவனம் வரலாற்று சாதனை” படைத்திருப்பதாக வந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. மேற்கண்ட விற்பனை இலக்கான நாளொன்றுக்கு 25 லட்சம் லிட்டர் என்பதை கடந்த மே 8ம் தேதியே எட்டியதாக ஆவின் நிர்வாக இயக்குனர் வள்ளலார் அப்போது அறிக்கை வெளியிட்டிருந்தார். அதிலும் அந்த அறிக்கையில் நாளொன்றுக்கு 24 லட்சம் லிட்டரில் இருந்து 25 லட்சம் லிட்டராக விற்பனை அதிகரித்து மிகப்பெரிய சாதனை படைத்ததாக தெரிவித்திருந்தார்.
மேலும், கடந்த மார்ச் 5ம் தேதி நாளொன்றுக்கு சென்னையில் 12.95 லட்சம் லிட்டரும், சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 11.37 லட்சம் லிட்டரும் ஆவின் பால் விற்பனையாகி 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரிய சாதனை படைத்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

ஆவின் நிறுவனத்தில் மே மாதம் எட்டப்பட்ட விற்பனை இலக்கு சாதனை மீண்டும் தற்போது ஜூலை மாதம் நிகழ்ந்திருப்பதாக கூறுவது ஆவின் நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பதையும், அதன் மூலம் மிகப்பெரிய அளவில் தவறுகள் நடைபெறுவதையும் அறிய முடிகிறது. மேலும் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியதாக அறிவிக்க கடந்த 30ம் தேதியன்று பால் முகவர்கள் அனைவரும் தங்களின் தினசரி கொள்முதல் அளவை விட அதிக அளவில் ஆவின் பாலினை கொள்முதல் செய்ய வேண்டும் என மொத்த விநியோகஸ்தர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இப்படி ஏற்கனவே நடந்த விற்பனையையும், கொள்முதலையும் புதிதாக நடத்தி சாதனை படைத்ததாக சித்தரித்து வரும் ஆவின் நிர்வாகத்தை கண்டிக்க வேண்டிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எதுவுமே நடக்காதது போல் இருக்கிறார். அப்படியானால் மேற்கண்ட “சாதனை முறைகேடுகள்” அவருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே ஆவின் நிர்வாகம் இனியாவது வெளிப்படைத்தன்மையோடும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். ஆவின் நிறுவனத்தை உண்மையான அக்கறையோடு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : Milk Agents 'Association ,milk dealers , Milk sales, hit record, 25 lakh liters, last May
× RELATED ஆவின் பணி முறைகேடு பற்றி முன்னாள்...