×

நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்தலாமா? வேண்டாமா?: மத்திய அரசு இன்று முடிவு

புதுடெல்லி: கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில் திட்டமிட்டபடி நீட், ஜேஇஇ நுழைவுத்தேர்வுகளை இம்மாதம் நடத்த முடியுமா என்பது ஆய்வு செய்து வருவதாக மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் 26ம் தேதியும், பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வு வரும் 18-23ம் தேதி வரையிலும் நடத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், தற்போது கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் நீட், ஜேஇஇ தேர்வுகளையும் ஒத்தி வைக்க வேண்டுமென பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்தன.

எனவே, தற்போதைய சூழலில் நீட், ஜேஇஇ தேர்வுகளை திட்டமிடப்படி நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சக குழு ஆய்வு செய்து வருகிறது. இது குறித்து மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று அளித்த பேட்டியில், ‘‘தேசிய தேர்வு நிறுவனம் (என்டிஏ) மற்றும் பிற நிபுணர்கள் கொண்ட குழு சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து நாளை (இன்று) தனது அறிக்கையை சமர்பிக்க உள்ளது,’’ என்றார். எனவே, நீட், ஜேஇஇ தேர்வுகள் குறித்து இன்று முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Federal Government , NEED, JEE, whether to conduct exams or not
× RELATED டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்த...