×

மியான்மரில் நடந்த சுரங்க விபத்தில் 125 பேர் பலி

யாங்கூன்: மியான்மரில் நடந்த நிலச்சரிவால், சுரங்கத்தில் தண்ணீர் புகுந்து 125 தொழிலாளர்கள் பலியாகினர். மியான்மர் நாட்டின் காச்சின் மாகாணத்தில் உள்ள பாகந்த் மாவட்டத்தில் மரகத கல் வெட்டி எடுக்கும் ஏராளமான சுரங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த சுரங்கங்கள் பல ஆயிரம் அடிகள் ஆழம் கொண்டது. இங்கு அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு, விபத்துகள் நடப்பது வழக்கம்.
நேற்று இதுபோல் ஒரு சுரங்கத்தின் அருகே குவிக்கப்பட்டு இருந்த மண்மேட்டில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அது அருகில் உள்ள ஏரியி–்ல் போய் விழுந்ததால், அதில் இருந்த தண்ணீர் பெரிய அலை போல் எழுந்து, அருகில் உள்ள சுரங்கத்தில் புகுந்தது.

இதனால், அந்த சுரங்கத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டது. தண்ணீர் புகுந்தது ஒருபுறம், நிலச்சரிவு ஏற்பட்டது மறுபுறம் என இந்த விபத்து மோசமாக இருந்தது. இதில், ஏராளமான ஊழியர்கள் உயிருடன் புதைந்தனர். மீட்பு படையினர் விரைந்து வந்து, 125 பேரிடன் சடலங்களை மீட்டனர். மேலும், காயங்களுடன் 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுரங்கத்தில் இன்னும் 200க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Tags : Myanmar ,accident ,mine accident , 125 killed, Myanmar ,mine accident
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!