×

சிறுபான்மையினருக்கு கடன் திட்டங்கள்: கலெக்டர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: சிறுபான்மையினருக்கான கடன் திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாக, காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் 2020 - 2021 ஆண்டுக்கான பல்வேறு கடன்கள் வழங்;கப்படவுள்ளது, இதில் கல்வி, தனிநபர் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில், கறவை மாடு, ஆட்டோ ஆகிய திட்டங்களுக்கு கடனுதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே. மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர்கள் (கிறித்துவ. இஸ்லாமிய. சீக்கிய. புத்த, பார்சி மற்றும் ஜெயின்)  https://www.tamco.tn.gov.in என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் (மனுதாரர் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று,

ஆதார், வருமானம், குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் - திட்ட அறிக்கை. ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகன கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்), கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ். உண்மை சான்றிதழ் கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்கள்) விண்ணப்பம் செய்து சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Minorities ,Minority , Minority, loan programs
× RELATED கனிமொழி பற்றி அவதூறு: பாஜ பிரமுகர் கைது