×

குணமானார் நோவக்

பெல்கிரேடு: கொரோனாவுக்காக சிகிச்சைப் பெற்றுவந்த டென்னிஸ் உலகின் ‘நெம்பர் ஒன்’ ஆட்டக்காரர் நோவக் டிஜோகோவிச்(செர்பியா) குணமடைந்துள்ளார். செர்பியாவில் கொரோானா பீதியால் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்  ஜூன் மாதம்  தளர்த்தப்பட்டன. அதனால் டென்னிஸ் உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான நோவக் டிஜோகோவிச், பக்கத்து நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்களை வைத்து செர்பியாவில் டென்னிஸ் போட்டியை நடத்தினார். அந்தப் போட்டியில்  பங்கேற்ற நோவக் உட்பட பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நோவக் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு, மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார்.

போட்டியை விதிமுறைகளை கடைபிடிக்காததால் தான் கொரோனா பரவியதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. செர்பிய பிரதமர் அனா பர்னபிக், கால்பந்து வீரர் நெமஞ்சா மேட்டிக் உட்பட பலர் ேநாவக்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். பிரதமர் குரல் கொடுத்த நேரம், 10 நாட்களாக மருத்துவ கண்காணிப்பில் இருந்த நோவக்கிற்கும் அவர் மனைவி ஜெலினா ஆகியோருக்கு நேற்று மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. அதில் நோவக்கிற்கு கொரோனா தொற்று நீங்கியிருப்பது உறுதியாகி உள்ளது. அவரது மனைவி ஜெலினா, குழுந்தைகளுக்கு 10 நாட்களுக்கு முன்பு நடந்த சோதனையிலும் தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் குடும்பத்தினர் தனிமைப்படுத்துதலை தொடர்வார்கள்.

Tags : Novak Djokovic ,Corona , Corona, Novak Djokovic, is recovering.
× RELATED பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்சை வீழ்த்திய சென்னை ஓபன் ரன்னர்!