×

பீகாரில் இன்று இடி, மின்னல் காரணமாக 20 பேர் உயிரிழப்பு; மாநில பேரிடர் மேலாண்மைத் துறை

பீகார்: பீகாரில் இன்று இடி, மின்னல் காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றும் வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதன் காரணமாக குடிநீர் சப்ளை, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Tags : State Disaster Management Department ,Bihar , Thunder, lightning, casualties, state disaster management department
× RELATED இவாங்கா ட்ரம்பின் பாராட்டில் நனைந்த பீகார் சிறுமி