×

அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது மனதை உலுக்குகிறது : டிடிவி தினகரன் வேதனை

சென்னை : அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது மனதை உலுக்குகிறது என்று டிடிவி தினகரன் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் கிராமத்தில், பால்மணம் மாறாத 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது மனதை உலுக்குகிறது. சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இத்தகைய கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைந்து கடுமையான தண்டனையை வழங்க வேண்டும். எனத் தெரிவித்துள்ளார்.


Tags : rape ,murder ,DTV Dinakaran In Aranthangi 7 , In Aranthangi 7-year-old girl was sexually abused, killed shakes mind: titivi News painful
× RELATED பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு...