×

அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை : தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை!!

அறந்தாங்கி : அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. காணாமல் போன அறந்தாங்கியைச் சேர்ந்த 7 வயது சிறுமியின் உடல் வறண்ட குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடல் ரத்த காயங்களுடன் கிடந்தது. இதைத்தொடர்ந்து, விசாரணையில் சிறுமிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.


Tags : Nalanda ,National Child Rights Protection Commission , 7 year old girl sexually abused and murdered in Nalanda: National Child Rights Protection Commission
× RELATED சிறுமியிடம் பலாத்கார முயற்சி வாலிபர் கைது