×

வாகன ஸ்டாண்டாக மாறிய ஜிஹெச்

காளையார்கோவில்: காளையார்கோவில் அரசு மருத்துவமனை காய்கறி, மீன் மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் வாகனங்கள் நிறுத்தம் இடமாக மாறிவருகின்றது காளையார்கோவில் பகுதியில் உள்ள வியாபாரிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் காய்கறி,
மீன் மற்றும் பழங்கள் ஏற்றிக்கொண்டு விற்பனை செய்து வருகின்றார்கள். அவ்வாறு வெளியூர்களில் விற்பனை செய்து விட்டு வரும் வாகனங்களை காளையார்கோவில் அரசு மருத்துவமனை உள்புரம் வளாகத்தில் நிறுத்தி விட்டு செல்கின்றனர், அவ்வாறு நிறுத்துவதற்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

மேலும் வெளியூர்களுக்கு சென்று வரும் வாகனங்கள் மூலம் கொரோன வைரஸ் தொற்று ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால் வருங்காலங்களில் அனைத்து வாகனங்களும் நிறுத்தும் இடமாக மாறி அரசு மருத்துவமனையில் சுகாதாரம் கேள்விக்குறியகிவிடும் என்று பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் கூறினார்கள்.

Tags : GH ,vehicle stand , GH, vehicle stand
× RELATED கொடைக்கானல் ஜிஹெச்சில் எந்த வசதியும் இல்லை: கொரோனா நோயாளிகள் புகார்