×

நீதிமன்ற உத்தரவிற்கு முன்பாகவே தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்: சாத்தான்குளம் சம்பவம் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து!

காரைக்கால்: நீதிமன்ற உத்தரவிற்கு முன்பாகவே சாத்தான் குளம் சம்பவத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். சாத்தான் குளத்தில் இரண்டு வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, விசாரணையின் பேரில் காவல் நிலையத்திலேயே அடுத்தடுத்து மரணமடைந்தனர். இதனைத்தொடர்ந்து, அவர்களது உறவினர்களும் மற்றும் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இந்த சம்பவம் மேலும் வலுப்பெற்று தமிழகம் முழுவதும் பரவ தொடங்கி, அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போதும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதனால் குற்றவாளிகளுக்கு தாமதமாக தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சாத்தான் குளம் சம்பவம் வலுப்பெற்றிருக்கும்போதே, தமிழக அரசு விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையை வழங்கிருக்கவேண்டுமென முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துளார்.

மேலும், நெல்வேலியில் என்.எல்.சி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்துக்குளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற விபத்துகள் அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் தீவிபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தை மத்திய அரசு வழங்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Narayanasamy ,Puducherry ,incident ,government ,Sathankulam ,Tamil Nadu , Tamil Nadu government should have taken action before the court order: Puducherry Chief Minister Narayanasamy
× RELATED கை சின்னத்துக்கு போடும் ஓட்டு.. மோடிக்கு வைக்கும் வேட்டு..