×

புதுகை மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்: ஒரே நாளில் ரூ.1 கோடி வர்த்தகம் பாதிப்பு

* மீன்பிடி தொழில் சார்ந்த உணவகங்கள், ஐஸ் பேக்ட்டரி, மீன்பிடி உதிரிப்பாக விற்பனை நிலையங்கள், வெல்டிங் பட்டறை உள்ளிட்டவைகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.

அறந்தாங்கி: டீசல் விலை உயர்வு, கொரோனா தொற்று தவிர்ப்பு போன்ற காரணங்களால் புதுக்கோட்டை விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று முதல் தொடங்கி இருப்பதால் ஒரே நாளில் ரூ.1 கோடி வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடித்தளங்களில் இருந்து 650 விசைப்படகுகள் மூலம் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். கொரோனா ஊரடங்கு, மீன் பிடித்தடைக்காலம் போன்றவற்றால் கடலுக்கு செல்லாமல் இருந்த மீனவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

கொரோனா தொற்றால் வெளிநாடுகளுக்கு கடல் உணவு ஏற்றுமதி தடைபட்டுள்ளதால், ஏற்றுமதி நிறுவனங்கள் இறாலை மிகவும் குறைவான விலைக்கே கொள்முதல் செய்கின்றன. தற்போது டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், ஏற்றுமதி நிறுவனங்களும் இறாலை குறைவான விலைக்கே கொள்முதல் செய்வதால், விசைப்படகுகள் மூலம் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில் இறால் விலை வீழ்ச்சி, டீசல் விலை உயர்வால் விசைப்படகு மீனவர்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டு வரும் நிலையில், மீனவர்களுக்கு கொரோனா தொற்றும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று முதல் தொடங்கினர்.

இதனால் 650 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வில்லை. இதனால் துறைமுக பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. மீன்பிடித் தொழிலை சார்ந்துள்ள பல்வேறு தொழில்களும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஒருநாளுக்கு ரூ.ஒன்றரை ேகாடி வர்த்தகம் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மீன்பிடி தொழில் சார்ந்த உணவகங்கள், ஐஸ் பேக்ட்டரி, மீன்பிடி உதிரிப்பாக விற்பனை நிலையங்கள், வெல்டிங் பட்டறை உள்ளிட்டவைகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகும். இதுதவிர ஜெகாதாபட்டினம், கோட்டைப்பட்டினத்தில் உள்ள மீனவர்கள் ஸ்டிரைக்கின் காரணமாக தங்கள் ெசாந்த ஊரான காரைக்கால், நாகை மாவட்டத்திற்கு சென்று விடுவதால் இங்குள்ள மளிகை கடைகளின் வருவாயும் கணிசமாக குறைந்துவிடும். எனவே மீனவர்கள் ஸ்டிரைக்கால் வர்த்தக ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : strike ,fishermen ,Fresh , Fresh fishermen, indefinite strikes, trade impacts
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து