×

ஐ.நா சபையை வியக்க வைத்த ஓசூர் மாணவி: சமூக மேம்பாட்டு பணிக்காக பிரிட்டிஷ் அரசு டயானா விருது வழங்கி கவுரவிப்பு!!!

கர்நாடகா: மனவளர்ச்சி குன்றிய பெண்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி வரும் ஓசூர் பள்ளி மாணவிக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் டயானா விருது வழங்கி கவுரவித்துள்ளது. ஓசூர் தில்லை நகரை சேர்ந்த கோபிநாத், சிரிசா தம்பதியினரின் மகள் நிஹாரிகா ஏழை, எளிய பெண்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்த கடந்த ஓராண்டாக ஹோப் வேர்ல்டு என்ற செயல் திட்டம் ஒன்றை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.

இந்த செயல்திட்டத்தை கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி  ஐக்கியநாடுகள் சபையிலும் தெரிவித்து பல நாட்டு அறிஞர்களையும் நிகாரிகா வியப்படைய செய்துள்ளார். இந்த செயல்திட்டத்தின் மூலம் ஓசூர் அப்பாலா மனவளர்ச்சி குன்றிய காப்பகத்தில் உள்ள 48 பெண்களுக்கு பெயின்டிங், துணிப்பைகள் தைத்தல், அழகு பொருட்கள் செய்தல் உள்ளிட்ட கை தொழில்களை கற்றுக் கொடுத்து வருகிறார்.

அதேபோல ஓசூர் அருகே உள்ள தொட்டமஞ்சு மலை கிராமத்தில் வாழும் ஏழை, எளிய பெண்கள் அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடையும் வகையில் அவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து சுய தொழில்களை கற்றுக் கொடுத்து வருகிறார். இந்நிலையில் மறைந்த பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் பிறந்தநாளை ஒட்டி பிரிட்டிஷ் அரசாங்கம் மாணவி நிஹாரிக்காவுக்கு டயானா விருது வழங்கி கவுரவித்துள்ளது. சமூகத்தில் கிராமப்புற ஏழை, எளிய பெண்கள் முன்னேற்றமடைய பாடுபட்டு வரும் மாணவிக்கு விருது வழங்கப்பட்டதால் அவரது பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : student ,United Nations ,Diana ,Hosur ,British Government ,British , Hosur student who surprised the UN: British government honors Diana with social development work
× RELATED உலகின் மகிழ்ச்சியான நாடுகளின்...