சென்னையில் வாடகைதாரர் விவரம் அளிக்காவிட்டால் 6 மாத சிறை!: சதித்திட்டத்தை முறியடிக்க மாநகர போலீஸ் அதிரடி!!!

சென்னை: சென்னையில் 60 நாட்களுக்குள் வாடகைதாரர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அளிக்கவில்லை என்றால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார். சென்னையில் சமூக விரோத சக்திகள் குடியிருப்புகளில் வாடகை எடுத்து தங்கி சுற்றியுள்ள மக்கள், வங்கி, வணிக வளாகங்கள் பற்றி நோட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது.

இதனை தொடர்ந்து, குறிப்பிட்ட உளவு தகவல் அடிப்படையில், தேச விரோத சக்திகள் சென்னையில் சதி வேளையில் ஈடுபட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுபோன்ற அருகிலுள்ள மாநிலம் மற்றும் நகரங்களில் வாடகை எடுத்து தங்கி கடும் குற்றங்கள் மற்றும் வங்கி கொள்ளைகள் நிகழ்த்தியதும் தெரிய வந்துள்ளது.

இதுபோன்று சென்னையில் நிகழாமல் தடுப்பதற்காக 144 குற்றவியல் நடைமுறை சட்டம், 1973 அடிப்படையில் சென்னையில் வீட்டு வாடகைக்கு இருப்பவர்கள் விவரத்தை வீட்டு உரிமையாளர்கள் இன்றையிலிருந்து 60 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறும் பொதுமக்களுக்கு 188 ஐ.பி.சி. சட்டத்தின் படி, 6 மாத சிறை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>