சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு காரணமான அனைவரது பெயர்களும் எப்ஐஆரில் சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும் :ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை : இரட்டை கொலைக்கு காரணமான அனைவரது பெயர்களும் எப்ஐஆரில் சேர்க்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொல்லப்பட்ட வழக்கில்,  பல்முனை அழுத்தத்தால் சட்டப் பொறியில் சிக்கிக் கொண்ட தமிழக அரசு  ஒரு சிலரை மட்டும் கைது செய்து, ஒப்புக்குக் கணக்குக் காட்டித் தப்பிவிட நினைக்கக் கூடாது.இரட்டைக் கொலைக்குக் காரணமான அனைவரது பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும். சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இரண்டு அப்பாவிகளைக் கொடூரமாகக் கொலை செய்தவர்கள், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தலையீட்டினால், உரிய சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு வளைக்கப்பட்டதை வரவேற்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: