சாத்தான்குளம் விவகாரம் : காவலர் ரேவதியை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீஸ் தரப்பு சாட்சியாகிறார், காவலர் முத்துராஜ்!!

தூத்துக்குடி : சி.பி.சி.ஐ.டி போலீஸ் தரப்பு சாட்சியாகிறார், காவலர் முத்துராஜ். காவலர் ரேவதியை தொடர்ந்து சிறப்பு எஸ்.ஐ., பால்துரை, முத்துராஜ் ஆகியோர் அப்ரூவராக சாட்சியம் அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ்- மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், எஸ்.பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்த சிபிசிஐடி போலீசார், அவர்கள் மீது இரண்டு கொலை வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். தப்ப முயன்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதரையும் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Related Stories:

>