×

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை தாண்டியது : இதுவரை 17,834 பேரின் உயிர்களை பலி வாங்கியது கொரோனா!!

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,85,493-லிருந்து 6,04,641-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,400-லிருந்து 17,834-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து  குணமடைந்தோர் எண்ணிக்கை 3,47,979-லிருந்து 3,59,859-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 434 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.நாட்டில் ஒரே நாளில் 19,148 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,26,947 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Corona ,India ,Corona India , India, Corona, impact, 6 lakhs, exceeded, lives, killed
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!