×

ஐசிசி தலைவர் ஷஷாங்க் திடீர் ராஜினாமா

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சேர்மன் ஷஷாங்க் மனோகர் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இது குறித்து ஐசிசி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொடர்ச்சியாக இரண்டு முறை ஈராண்டு பதவிக் காலத்தை வகித்த ஐசிசி சேர்மன் ஷஷாங்க் மனோகர், பதவி விலகியுள்ளார். இதைத் தொடர்ந்து கூடிய ஐசிசி நிர்வாகக் குழு கூட்டத்தில், புதிய சேர்மன் தேர்வு செய்யப்படும் வரை தற்போதைய துணை சேர்மன் இம்ரான் க்வாஜா இடைக்கால தலைவராக பொறுப்பேற்பார். இவ்வாறு ஐசிசி தெரிவித்துள்ளது.

புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைமுறைகள் குறித்து ஐசிசி நிர்வாகக் குழு ஒரு வாரத்துக்குள்ளாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த ஷஷாங்க் மனோகர் கடந்த 2015 நவம்பரில் ஐசிசி தலைவராக பொறுப்பேற்றார். ஐசிசி-யின் முதலாவது சுய அதிகாரம் கொண்ட தலைவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளவர்களில் இந்திய அணி முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவருமான சவுரவ் கங்குலி, இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் கோலின் கிரேவ்ஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Tags : Shashank ,resignation ,ICC , Shashank, ICC president resigns
× RELATED தயாரிப்பாளர் ஆனார் ராஜமவுலி மகன்