×

வர்த்தக காஸ் சிலிண்டர் 1 ரூபாய் அதிகரிப்பு மானியமில்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.4 அதிகரிப்பு: சென்னையில் ரூ.610.50, சேலத்தில் ரூ.628.50

சேலம்: நாடு முழுவதும் நடப்பு மாதத்திற்கு மானியமில்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.4 உயர்ந்தது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு காஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. கொரோனா பரவலின் காரணமாக கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்ததால், மார்ச், ஏப்ரல், மே மாதத்தில் காஸ் சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டது. ஆனால், கடந்த மாதத்தில் (ஜூன்) திடீரென 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.37ம், 19 கிலோ வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.110ம் அதிகரிக்கப்பட்டது.

இந்த விலையேற்றம் நடப்பு மாதமும் (ஜூலை) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.4ம், வர்த்தக காஸ் சிலிண்டர் விலை 1 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று முதல், இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சென்னையில், வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.606.50க்கு விற்கப்பட்ட நிலையில், நடப்பு மாதம் ரூ.4 உயர்ந்து, ரூ.610.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே சேலத்தில் ரூ.624.50ல் இருந்து, ரூ.628.50 ஆக அதிகரித்துள்ளது. டெல்லி, மும்பையில் ரூ.594 ஆகவும், கொல்கத்தாவில் 620.50 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை, நாடு முழுவதும் 1 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த மாதம் ரூ.1,254க்கு விற்கப்பட்ட வர்த்தக சிலிண்டர், நடப்பு மாதத்திற்கு (ஜூலை) 1 ரூபாய் அதிகரித்து ரூ.1,255 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே சேலத்தில் கடந்த மாதம் ரூ.1,215.50 ஆக இருந்தநிலையில், தற்போது ரூ.1,216.50 ஆக உயர்ந்துள்ளது. இவ்விலையில் தான் நடப்பு மாதம் முழுவதும் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பெருமளவு உயராமல் சராசரியாக இருப்பதால், விலையேற்றம் மிக குறைந்த அளவு மேற்கொள்ளப்பட்டுள்ளது என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பெருமளவு உயராமல் சராசரியாக இருப்பதால், விலையேற்றம் மிக குறைந்த அளவு மேற்கொள்ளப்பட்டுள்ளது என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Chennai ,Salem , Trade, Gas cylinder, Rs 1, increase, cylinder price Rs 4, increase, Chennai, Rs 610.50, Salem Rs 628.50
× RELATED ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!!