×

ஞயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ஞயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடை பிடிக்கப்படுவதால் அன்றைய தினம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் மருந்து கடைகள் மற்றும் மருத்துவமனைகளை தவிர அனைத்து கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் ஞயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 5, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது. மாவட்ட மேலாளர்கள் கடைகள் மூடப்படுவதை கண்காணிக்க வேண்டும் என அரசு கூறியுள்ளது.

Tags : holidays ,Tamil Nadu ,Govt , Sunday, Task Shops, Holidays, Tamil Nadu
× RELATED தமிழகத்தில் காலாண்டு விடுமுறைக்குப்...